பாடசாலை கட்டிட நிதிக்காக ரூபா 65000 அன்பளிப்பு.

யாழ் வலயத்தை சார்ந்த பாடசாலை ஒன்று தமது திறந்தவெளி மண்டபத்தை வகுப்பறையாக மாற்றுவதற்கு அங்கத்தவர் ஒருவருக்கு நிதி வேண்டி கோரிக்கை கடிதம் வழங்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் எமது அங்கத்தவரான மா.ராஜீவனின் மகள் ஆதிரா அவர்களது பிறந்த தினத்தை(19.04.2022) முன்னிட்டு இலங்கை ரூபா 30000/- ஐ ஒன்றியத்தின் பெயரில் பாடசாலைக்கு வழங்கியிருந்தார். 21.04.2022 அன்று இவ் நிகழ்வில் நேரடியாக பணத்தை வழங்குவதற்காக பாடசாலைக்கு சென்றிருந்த தலைவர் மு. முரளிதரன் அவர்கள் பாடசாலையில் சுற்றுச் சூழல்களை அவதானித்து தனது சொந்த நிதியில் ரூபா 25000/- ஐ அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.


மேலும் தலைவர் முரளிதரன் அவர்களோடு சென்றிருந்த அவரது நண்பர் க. துரைசிங்கம் அவர்களும் ரூபா 10000/- ஐ ஒன்றியத்தின் பெயரில் அன்பளிப்பாக வழங்கியிருந்தார். மொத்தமாக 65000/- வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Updated: May 6, 2022 — 7:53 pm

The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *