கரம்‌ கொடுப்போம்‌ நிகழ்ச்சித்திட்டம்

வணக்கம்‌
எம்‌ அன்பான உறவுகளே
உங்கள்‌ வீட்டில்‌ நிகழும்‌ நிகழ்வுகளை எங்கள்‌ தாயக
உறுவுகளுடனும் இணைந்து கொண்டாடுங்கள்‌
எமது தாயகத்திலே போரின்‌ வடக்களை சுமந்து சொல்லனா துயரங்களுடன்‌
வாழ்ந்து கொண்டிருக்கும்‌ எமது உறவுகளின்‌ வாழ்வாதாரத்தினை புனரமைக்கும்‌
முகமாக அவர்களின்‌ குடும்ப பொருளாதார அபிவிருத்தி குழந்தைகளின்‌ கல்வி
மேம்பாடு மற்றும்‌ தாயக சமூகம்‌ சார்ந்த செயற்பாடுகளிற்காக எம்மால்முடிந்த
உதவிகளை நிட்வால்டன்‌ வாழ்‌ உறவுகளுடன்‌ இணைந்து நிட்வால்பன்‌ தமிழர்‌
ஒன்றியமானது கரம்‌ கொடுப்போம்‌ நிகழ்ச்சித்திட்பத்தினூபாக அவர்களிற்கு
தேவையான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளது.
எனவே எமது அன்பான உறவுகளே உங்கள்‌ இல்லங்களில்‌ நடைnபறுகின்ற
பிறந்த நாள்‌ திருமண வைபவம்‌ திருமண நாள்‌ பூப்புனித நீரட்டுவிழா மற்றும்‌
சிறப்பு நினைவு தினங்கள்‌ போன்ற நாட்களில்‌ நீங்கள்‌ உங்களால்‌ முடிந்த
ஓர் தொகையை எமது தாயக உறவுகளிற்காக வழங்க முன்வரவேண்டூம்‌ என
அன்புடன் வேண்டிநிற்கின்றோம்‌.
அவ்வாறு தாங்கள்‌ தருகின்ற உதவித்தொகையானது தொகையின்‌ பெறுமதியின்‌
அடிப்படையில்‌ தனிநபரினுபைய அல்லது ஒர்‌ குழுவினுடைய உதவியாக எமது
ஒன்றியத்தின்‌ ஊடாக உதவி கோருபவர்களின்‌ விபரங்கள்‌ ஆராயப்பட்ட உறுதிப்‌
படுத்தப்பட்டு வழங்கப்படும்‌. அத்துடன்‌ உதவி செய்வோருக்கு உதவி பெறுபவர்களின்‌
அனைத்துவிபரங்களும்‌ அனுப்பிவைக்கப்படம்‌.
எமது ஒன்றியமானது கடந்த 2017 தொடக்கம்‌ எமது தாயக உறவுகளிற்கான சிறிய
உதவிகளை அவ்வப்பொழுது வழங்கி வருகின்றமை குறிப்பிபத்தக்கது அவ்வாறு
வழங்கிய வழங்கிகொண்டிருக்கின்ற உறவுகளிற்கு எமது மனமார்ந்த நன்றிகளை
தெரிவித்து கொள்கின்றோம்‌.
எனவே எமது அன்புக்கினிய உறவுகளே முன்வாருங்கள்‌ பங்கெடுங்கள்‌ எம்மோட
சேர்ந்து பயணியுங்கள்‌. யுத்தம்‌ தந்த வலிகளால்‌ தமது அன்றாட வாழ்க்கைகான
ஆதாரங்களை தொலைத்து நிற்கும்‌ எம்‌ உறவுகளிற்கு வாருங்கள்‌ நாம்‌ எல்லோரும்‌ சேர்ந்து கரம்‌ கொடுப்போம்‌.
நன்றி

Updated: April 9, 2022 — 5:17 pm

The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *