எமது ஒன்றியத்தின் அங்கத்தவரும் நிர்வாக உறுப்பினருமான முருகேசு கிரிதரன் அவர்கள் தனது பிறந்த தினத்தை(17.04.2022) முன்னிட்டு தொண்டமனாறு கிராமத்தில் தந்தையை இழந்த குடும்பத்தில் வசிக்கும் சிறுவனுக்கு துவிச்சக்கரவண்டி ஒன்றை 14.04.2022 அன்று அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
அத்துடன் கல்வி செலவுகளுக்காக ஒரு தொகை நிதியுதவியையும் வழங்கி வைக்கவுள்ளார். கிரிதரன் மற்றும் அவர் குடும்பத்தினருக்கும் இறைவன் அருள் ஓங்கி நீடூழி வாழ்கவென வாழ்த்தி அருக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். நிட்வால்டன் தமிழர் ஒன்றியம்.