அனைவருக்கும் வணக்கம்
அன்னையர் தினம் தொடர்பானது
எதிர்வரும் 20-05-2023 சனிக்கிழமை 14.00 மணியளவில்
அன்னையர் தின நிகழ்வை சிறப்பாக நடாத்துவதற்கு நிட்வால்டன்
தமிழர் ஒன்றியமானது தீர்மானித்துள்ளது. இந்த உலகின் அன்பின்
மறுவுருமான தாய்க்கு நிகர் எதுவுமில்லை. இவ்வண்ணம் உலக மக்கள்
அனைவராலும் போற்றிக் கொண்டாடும் சர்வதேச அன்னையர் தினத்தில்
நிட்வால்டன் ஒன்றிய அன்னையர்கள் அனைவரையும் வணங்கி
போற்றுவதில் மன மகிழ்வடைகின்றோம். அனைவரையும்
அழைத்து நிற்கின்றோம்.
மேலும் கலை நிகழ்வுகள் மற்றும் அன்னையர் கௌரவிப்பு அதனை தொடர்ந்து உணவு விருந்து என்பன நடைபெறவுள்ளதால் தங்கள் வருகையை
உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தாழ்மையாக வேண்டி நிற்கின்றோம்.
இணைத்தளத்தின் ஊடாகவும் உங்கள் வருகையை உறுதிப்படுத்த முடியும்