எமது நிட்வால்டன் தமிழர் ஒன்றியத்தின் முத்தமிழ் விழா கடந்த 29.01.2023 அன்று சிறப்பாக நடைபெற்றது. ஒன்றியத்தின் தலைவர் திரு முருகுப்பிள்ளை முரளிதரன் நெறிப்படுத்தலில் உபதலைவர் திரு கந்நசாமி கலைவேந்தன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் முதன்மை விருந்தினராக சுவிஸ் தமிழ்க் கல்விச் சேவை ஒருங்கிணைப்பாளர் திரு கந்தசாமி பார்த்திபன் அவர்கள் பங்குகொண்டார்.
கௌரவ விருந்தினர்களாக லுட்சேர்ன் இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் குருக்கள் சிவஸ்ரீ இராம.சசிதரக் குருக்களும், லுட்சேர்ன் தமிழ் மன்றத்தின் தலைவர் திரு தியாகராஜா தருமபாலனும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சுவிஸ் பிராந்தியச் செயற்பாட்டாளர் திரு இரத்தினம் கிருபானந்தனும், ஊரி மாநிலத்தின் சுவிஸ் மகளிர் அமைப்பின் செயற்பாட்டாளர் திருமதி உமா வசந்தமோகனும், லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத் தலைவர் திரு நாகரத்தினம் யோகராசாவும், சுவிஸ் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் திரு சந்திரசேகரம் புகழரசன் ஆகியோரும் பங்குகொண்டிருந்தனர்.
நிகழ்வில் இயல், இசை, நாடகம் என பலவகை கலை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு மதிப்பளிப்புக்களும் இடம்பெற்றன.